என்னங்க பண்றது? பெட்ரோல் விலை ஏறி ஏறி இப்ப திரும்பவும் ஏத்த போறாங்களாம். ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல... பெட்ரோல் அமைச்சகம் இப்ப லிட்டருக்கு பதினாறு ரூபா ஏத்த பரிந்துரை செஞ்சு இருக்காங்களாம். நினைச்சா வயித்த கலக்குது... இந்திய ஆயில் நிறுவனங்கள் பங்குகளுக்கு பண்ற பெட்ரோல் சப்ளையும் கம்மி பண்ணி இருக்காங்களாம். அதனால பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். பெட்ரோல் நஷ்டத்தை ஈடுகட்ட வரி விதிக்கலாமானு கூட யோசிக்கிறாங்கலாம். ஒண்ணு, நாம பெட்ரோல அதிக காசு கொடுத்து வாங்கணும்... இல்ல சம்பளத்துல இருந்து வாங்காத பெட்ரோலுக்கு அவங்களே காச எடுத்துக்குவாங்களாம்... என்ன பண்றது? புலம்ப தான் முடியும்... :-)
நான் கடந்த ரெண்டு மாசமா ஒரு சைக்கிள் வாங்கலாம்ன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். அதுல பல நன்மைகள்...
1) பெட்ரோல் தேவையில்லை
2) உடலுக்கு நல்ல எக்சசைஸ்
3) சுற்றுசுழலுக்கும் நல்லது
நீங்க என்ன நினைக்கறீங்க?
4 comments:
After 9 Years, I started to use my cycle. My office is 8 Km from my house, in the morning time, getting bit tired. And in the evening it's good.
--
Rajan
நன்றி ராஜன். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வியர்த்து விறுவிறுக்க ஆபீஸ் போகும்படி அமைந்து விடுமோ? :-(
ஜாக்கிரதையா இருங்க... சைக்கிள் வாங்கறவங்களை எல்லாம் இப்போ ரொம்ப விசாரிக்கிறாங்களாம்...
R.சுதாகர்
//ஜாக்கிரதையா இருங்க... சைக்கிள் வாங்கறவங்களை எல்லாம் இப்போ ரொம்ப விசாரிக்கிறாங்களாம்...//
ஒ... அது வேற இருக்கோ?
தகவலுக்கு நன்றி, சுதாகர் :-)
Post a Comment