Friday, April 4, 2008

சேப்பாக்கத்தில் ஒரு கிறுக்கு கும்பல்

இன்னிக்கி சேப்பாக்கத்தில் ஒரு கோஷ்டி உக்கார்ந்துட்டு உண்ணாவிரதம் பண்ணுறாங்க. அங்க எதுக்குயா ஒரு மைக்? மைக் கிடைச்ச போதுமே... உடனே வாய்க்கு வந்தது எல்லாம் பேச ஆரம்பிச்சுடாங்க. அத உலகமெல்லாம் ஒளிபரப்ப இருக்கவே இருக்கு சன் டிவி.

என்ன பேசுறோம்னு தெரியாம பேசிட்டு இருக்கானுங்க. வன்முறைய எதிர்க்க உண்ணாவிரதம்னு வன்முறைய தூண்டுற மாதிரி பேசிட்டு இருக்காங்க. எந்த விதமான தணிக்கையும் இல்லாம அத லைவ ஒளிபரப்பிட்டு இருக்காங்க.

சுந்தர் சி ... இனிக்க இனிக்க காமெடி படம் எடுக்குற டைரக்டர்... ஆனா பேச்சுல என்னா காரம். அவர் என்ன சொல்ராருனா "நல்ல படம் எடுக்க வக்கு இல்லாதவன் நம்ம படத்த தடை பண்ணுறான்"ன்னு கன்னட காரன பார்த்து சொல்லுறாரு. வேறொரு இனத்தவனோட தகுதி பத்தி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு?

பேசுற எல்லோரும் அடிப்போம் பிடிப்போம் ங்கற மாதிரிதான் பேசுறாங்க. ஒரு பழுத்த அரசியல்வாதியின் பக்குவமான பேச்சுக்கே ஊர் பத்தி எரியும் போது, இவனுங்க பேச்சா வன்முறைய அடக்க போகுது?

ஒன்னு, உடனே அந்த மைக்க புடுங்கனும். இல்ல அமைதியா உண்ணாவிரதம் மட்டும் பண்ணிட்டு போகணும். சொந்த ஊர் ரசிகர்கள் மத்தில போலிஸ் பாதுகாப்புல இருக்குற இவனுங்க தங்கள் உயிரை கொடுத்தாவது கர்நாடக தமிழர்கள் உயிரை காப்பாத்த போறாங்களாம்...

5 comments:

Anonymous said...

சும்மா பந்தா காட்டிகிட்டு இருக்காங்க.. இது சன் டிவீ செய்யற அலம்பல் தாங்கல.
உண்மையாவெ, இவங்க தமிழர் நலனுக்கு பன்றதா இருந்தா எப்பவோ பன்னியிருக்கனும்.. இவங்க பன்றதுக்கு முக்கிய காரணம், திரையரங்கம் தாக்கப்பட்டது, அங்கே தமிழ் படம் ஓடலனா இவங்க பிஸினஸ் பாதிக்கும்.. அது தான் காரணம்.
10, 11 மனிக்கு கையசைச்சுகிட்டு வராங் , நல்ல உண்ணாவிரதம்.

வால்பையன் said...

இதைவிட பெரிய காமெடி ராஜ்கிரண் இந்தியா வல்லரசாகும்ன்னு சம்பந்தமில்லாது டைலாக் விட்டது

வால்பையன்

மங்களூர் சிவா said...

கலக்கலான போஸ்ட்.

நானும் கொஞ்ச நேரம் இந்த காமெடிய சன் நியூஸ்ல பாத்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப சரியா சொல்லி இருக்க்கீங்க..

Unknown said...

என்னத்த சொல்றது!!!
நெஜமாவே எல்லாருக்கும் கிறுக்கு பிடிச்சு போச்சு!!!!
நம்ம ரஜினி நிலைமை ரொம்ப பாவம்...அவரு சினிமான்னு நினைச்சு ஸ்டைலா டயலாக் விட்டாரு...இப்ப அவருக்கு அங்க ரிவிட்டு அடிக்கிறாங்க!!!
சத்யராஜ் பேச்சும் ரொம்ப ஓவர்...ஒரு மேடைல எப்படி பேசணும் எந்தமாதிரி பேசனும்னே இவங்களுக்கு தெரியல..இதுல ஆளாளுக்கு நாற்காலி கனவு...
என்ன பொருத்த வரைக்கும் நல்லா பேசினது கமல் தான்!!!