இன்று (05-03-2008) டைம்ஸ் ஆப் இந்தியா பெங்களூர் பதிப்பில் சென்னை பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது. ஆசிய மக்கள் வாழ்வதற்கு சிறந்த இடங்களின் தரவரிசையில், இந்திய நகரங்களில் முதலிடமாக சென்னை வந்துள்ளது. உலக நகரங்களில் 138 வது இடத்தில் சென்னை உள்ளது. முதல் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இது பற்றிய செய்தியை இந்த படத்துடன் வெளியிட்டு உள்ளார்கள்.
முன்பெல்லாம் சென்னை, தமிழகம் பற்றிய பொதுவான செய்திகளுக்கு கோவிலை அடையாளமாக போடுவார்கள். இன்று இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். செய்திக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத படம்.
சென்னையின் அடையாளம் ரஜினியா? ரஜினியின் படங்களா? ரஜினி ரசிகர்களா? சினிமா பைத்தியங்களா? அவர்கள் செய்யும் கேனத்தனமான செயல்களா?
இது அனைத்துமே சென்னை மக்களை, தமிழர்களை தரம் தாழ்த்துபவைகள். சிவாஜி படத்தின் போது தேசிய மீடியாக்கள் அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை பார்த்து மகிழ்ந்த மனம் இன்று அசிங்கபடுகிறது.
4 comments:
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து, அந்த படத்தை போட்டிருந்தால் அது கலாச்சார அடையாளம்; அதே வேலையை ஒரு ரஜினி கட்டவுட்டிற்கு செய்து அந்த படத்தை போட்டால் அது தமிழர்களை கேவலப்படுத்துவது என்பது எப்படி? பார்கவே பார்த்திராத கடவுளுக்கு, வெறும் நம்பிக்கையின் பேரில் செய்வதை, பார்த்து ரசித்த ஒருவருக்கு அபிமானம் காரணமாய் செய்வது எப்படி முன்னதை விட கேவலமானது ஆகும்?
//பார்கவே பார்த்திராத கடவுளுக்கு, வெறும் நம்பிக்கையின் பேரில் செய்வதை, பார்த்து ரசித்த ஒருவருக்கு அபிமானம் காரணமாய் செய்வது எப்படி முன்னதை விட கேவலமானது ஆகும்?//
நல்ல சிந்தனை... :-) இதை ரசிகர்கள் fun ஆக செய்வதாக எடுத்து கொண்டாலும் அது ஒரு பெரிய குற்றம் இல்லாவிட்டாலும் அதுவே ஒரு நகரத்தின் அடையாளமாக முடியாது. நான் நினைப்பது என்னவென்றல் நமது பெருமையாக நினைப்பது எதையாவது ஒன்றை அடையாளமாக காட்டினால் சந்தோஷபடலாம். இதை பெருமையாக நினைக்க முடியவில்லையே?
தமிழனின் தலைசிறந்த அடையாளமான டாஸ்மாக் கடைகளையும் அதன்முன் நிற்கும் குடிமகன்களையும் போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும். அதைத் தவிர சென்னையில் இருப்பது 'கட் அவுட்' களும், டிஜிடல் பேனர்களும்தான் (கழகக் கண்மணிகளின் பாசம்).
வேரெந்த சொல்லிக்கொள்ளும் படியான அடையாளங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
//தமிழனின் தலைசிறந்த அடையாளமான டாஸ்மாக் கடைகளையும் அதன்முன் நிற்கும் குடிமகன்களையும் போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.//
ஹா ஹா ஹா ...
//வேரெந்த சொல்லிக்கொள்ளும் படியான அடையாளங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.//
என்னங்க இப்படி சொல்லிட்டிங்க?
Post a Comment