Wednesday, February 20, 2008

Tax மேல Tax

பட்ஜெட் வரபோகுது. என்னென்ன வரி போட போறாங்களோ? அதுக்கு முன்னாடி வரி பத்திய ஒரு ஜோக். ஆனா உண்மைதான். இது இணையத்தில் படித்தது.

இந்தியாவில் வரி கட்டமைப்பு

கேள்வி: நீங்க என்ன பண்ணுறீங்க?
பதில்: தொழில் செய்யுறேன்.
அப்ப ப்ரொபஷனல் டேக்ஸ் கட்டுங்க!!!

கேள்வி: என்ன தொழில் செய்யுறீங்க?
பதில்: பொருட்கள் வாங்கி விக்குறேன்.
அப்ப விற்பனை வரி கட்டுங்க!!!

கேள்வி: எங்க இருந்து பொருட்கள் வாங்குறீங்க?
பதில்: வெளிமாநிலங்கள இருந்தும் வெளி நாட்டுல இருந்தும் வாங்குறேன்.
அப்ப மத்திய விற்பனை வரியும் கஸ்டம்ஸ் டியுடியும் கட்டுங்க!!!

கேள்வி: பொருட்கள் வித்தா?
பதில்: லாபம் கிடைக்கும்.
அப்ப வருமான வரி கட்டுங்க!!!

கேள்வி: நீங்க எதாவது பொருட்கள் தயாரிக்கிறீங்களா ?
பதில்: ஆமாம்.
அப்ப EXCISE DUTY கட்டுங்க!!!

கேள்வி: உங்களுக்கு அலுவலகம், தொழிற்சாலை எதாச்சும் இருக்குதா?
பதில்: ஆமாம்.
அப்ப முனிசிபாலிட்டி வரி கட்டுங்க!!!

கேள்வி: உங்களுக்கு கீழ யாராச்சும் வேல பாக்குராங்களா?
பதில்: ஆமாம்.
அப்ப STAFF PROFESSIONAL TAX கட்டுங்க!!!

கேள்வி: உங்க தொழில் கோடிகளில் நடக்குதா?
பதில்: ஆமாம்.
அப்ப TURNOVER TAX கட்டுங்க!!!

கேள்வி: நீங்க வங்கில இருந்து 25000 ரூபாய் எடுத்தீங்களா?
பதில்: ஆமாம். சம்பளத்துக்காக.
அப்ப CASH HANDLING TAX கட்டுங்க!!!

கேள்வி: நீங்க உங்க வாடிக்கையாளரை உணவுக்காக எங்க கூட்டிட்டு போவிங்க?
பதில்: ஹோட்டல்லுக்கு தான்.
அப்ப FOOD & ENTERTAINMENT TAX கட்டுங்க!!!

கேள்வி: நீங்க வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்களா?
பதில்: ஆமாம்.
அப்ப FRINGE BENEFIT TAX கட்டுங்க!!!

கேள்வி: நீங்க எதாவது ஒரு சேவையை பெறவோ கொடுக்கவோ செய்கிறீர்களா?
பதில்: ஆமாம்.
அப்ப சேவை வரி கட்டுங்க!!!

கேள்வி: உங்களுக்கு எப்படி இவ்வளோ பணம் கிடைத்தது?
பதில்: பிறந்த நாள் பரிசா கிடைத்தது.
அப்ப GIFT TAX கட்டுங்க!!!

கேள்வி: உங்ககிட்ட எதாச்சும் சொத்து இருக்கா?
பதில்: ஆமாம்.
அப்ப சொத்து வரி கட்டுங்க!!!

கேள்வி: டென்சன் ஆகிட்டிங்களா? டென்சன் ஆனா எங்க போவிங்க?
பதில்: எதாச்சும் படத்துக்கு போவேன்.
அப்ப கேளிக்கை வரி கட்டுங்க!!!

இதுக்கு மேல அந்த ஆளு உயிரோட இருப்பாருன்னா நினைக்குறீங்க. :-)

ஒரு நாட்டுக்கு வரி என்பது ரொம்ப முக்கியம். நம்ம நாட்டுல வரி அதிகமா? இல்ல குறைவா? என்பதல்ல கேள்வி. சமீபத்துல, ஒரே மேடையில முகேஷ் அம்பானியும், ப. சிதம்பரமும் இருக்கும் போது முகேஷ்கிட்ட "நீங்க நிதியமைச்சர்கிட்ட எதாச்சும் கேக்குரதுன்ன கேட்கலாம்"ன்னு சொன்னாங்க. அப்ப அவர் நிதியமைச்சர்கிட்ட வரி அதிகமா இருக்கு, குறைங்க..ன்னாரு. பாருங்க, நாட்டுல எவ்வளவு சம்பாதிச்சாலும் வரி கட்ட கஷ்டமா இருக்கு. அதே மாதிரி வரி எவ்வளவு இருந்தாலும் கட்ட கஷ்டமா தான் இருக்கும்.

பார்ப்போம்... நம்ம நிதியமைச்சர் எப்படி பட்ஜெட் போடுராருன்னு. அவரு எப்படி பட்ஜெட் போட்டாலும், நம்ம அரசியல்வாதிகள்கிட்ட இருந்து எப்படி அறிக்கை வரும்னு உங்களுக்கு தான் தெரியுமே? காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் ஆஹா ஓஹோ ன்னு சொல்லுவாங்க... பிஜேபி கூட்டணியும் ஜெயலலிதாவும் சேச்சே ன்னு சொல்லுவாங்க... ஆனா நியாயமா வரி கட்டுகிற மக்கள் ஒண்ணும் பண்ண முடியாம பார்த்துட்டு இருப்பாங்க.

எது எப்படியோ, நிதியமைச்சர் எந்த அரசியலும் இல்லாம நாட்டுக்கு நல்லது பண்ணுற பட்ஜெட்டை தாக்கல் பண்ணினால் நமக்கு நல்லது தான்.

No comments: