இன்னைக்கி (23-01-2008) காலைல சன் மியுசிக் "வாழ்த்தலாம் வாங்க" நிகழ்ச்சிக்கி ஒரு கால் வருது.
ஹேமா சின்ஹா : ஹலோ
அழைப்பாளர் : (ரகசியமான குரலில்) ஹலோ... நான் ஒசுர்ல இருந்து பேசுறன்....
ஹேமா சின்ஹா : ஹலோ... என்னங்க உங்க குரலுக்கு? உடம்பு சரி இல்லையா?
அழைப்பாளர் : இல்ல.. நான் காலேஜ்ல இருந்து பேசுறேன்...
ஹேமா சின்ஹா : ஒ! காலேஜா? இன்னும் staff யாரும் வரலையா?
மாணவன் : இல்ல... எக்ஸாம் ஹால்ல இருந்து பேசுறேன்....
ஹேமா சின்ஹா : எக்ஸாம் ஹால்லா? காலைலா 9 மணிக்கே எக்ஸாமா?
மாணவன் : ஆமாம்
ஹேமா சின்ஹா : இன்ஜினியரிங் காலேஜா?
மாணவன் : ஆமாம்
ஹேமா சின்ஹா : உங்களுக்கு எதாவது question க்கு answer தெரியலன்னா என்கிட்டே கேளுங்க... நான் சொல்றேன்...
மாணவன் : இல்ல... ஒண்ணும் இல்ல...
ஹேமா சின்ஹா : அங்க சூபர்வைசர் யாரும் இல்லையா?
மாணவன் : இருக்காரு... சும்மா நின்னுட்டு இருக்காரு...
ஹேமா சின்ஹா : சும்மா நிக்குறார? சரி... ஒழுங்கா எக்ஸாம் எழுதுங்க... இப்ப உங்களுக்கான பாடல்...
இது எப்படி இருக்கு?
பேசவே கூடாத தேர்வறையில் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு செல்போன் மூலம் அழைக்கும் மாணவன்...
மாணவன் என்று தெரிந்தும் அழைப்பை துண்டிக்காமல் நிகழ்ச்சியை தொடரும் ஒருங்கிணைப்பாளர்...
பதில் சொல்லி தரவா என்று கேட்கும் தொகுப்பாளர்...
விதிகள் உடைக்கப்பட்டு பொறுப்புணர்ச்சி ஒழிக்கப்பட்டு அது ஒரு song dedication னுடன் உலகமெங்கும் ஒளிபரப்பு...
14 comments:
கோபப்படாதீங்க குமரன் !
இந்தக் கருமத்தையெல்லாம் பார்க்கவே கூடாது என்னை மாதிரி :)
சரவணகுமரன்,
அபத்தம்தான்.... !;(
பொறுப்பின்மையின் உச்சக்கட்டம்!
சரவணகுமார்,
அது டுபாகூருங்க.. அவன் தேர்வறையிலிருந்த பேசல.. சும்மா உடான்ஸ்..
குமுகாய பொறுப்பு என்பது இல்லாததாகி விட்டது. ஒவ்வொருவர் வாழ்விற்கும் அவர்களே பொறுப்பு என்றாகிவிட்டது. முன்பின் தெரியாத சிறுவன் தவறிழைத்தாலும் கண்டிக்கும் கிராம பண்புகள் நகரங்களில் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
தேர்வு நடக்கும் இடத்திற்கு செல்போன் அனுமதிக்க மாட்டாங்க, யாரோ காலாய்ச்சிருக்காங்க...அந்த அம்மாவும் பதிலுக்கு கலாய்ச்சிருக்கு.
இதுக்கு போய் எதுக்கு சீரியஸ் ?
ஹேமா சின்ஹாவுக்கு போன் போட்டும் லைன் கிடைக்கலையா ?
புதுசா இருக்கே..
ஹேமா சிங்ஹாவுக்கு திருமணம் ஆயிட்டதாக ஒரு வதந்தி உண்மையா?
இணையத்தில் 'பின்னூட்ட' கயமை செய்வதைப் போல, அவங்களும் 'போனூட்ட' கயமை செய்திருப்பாங்க... லூசுல விடுங்க.....
மாணிக்க வாசகம் கூறுவதே சரி போல் உள்ளது. ஆனாலும் நம்ம வானொலி,தொகா..தொகுப்பாளர்களும்
நேயர்களும் அடிக்கும் லூட்டிக்கு இன்னுமொரு சுனாமி தாக்கினாலும் ஆச்சரியம் இல்லை.
மிகக் கேவலம்...
//இந்தக் கருமத்தையெல்லாம் பார்க்கவே கூடாது என்னை மாதிரி :)//
ரிப்பீட்டேய்...
//
ஹேமா சிங்ஹாவுக்கு திருமணம் ஆயிட்டதாக ஒரு வதந்தி உண்மையா?
//
இங்க என்ன நடந்துக்கிட்டிருக்கு? நீங்க என்ன கேள்வி கேட்கிறீங்க? இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா உங்களுக்கு? :)))))))
//முன்பின் தெரியாத சிறுவன் தவறிழைத்தாலும் கண்டிக்கும் கிராம பண்புகள் நகரங்களில் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.//
--ரிப்பிட்டு...
//ஹேமா சிங்ஹாவுக்கு திருமணம் ஆயிட்டதாக ஒரு வதந்தி உண்மையா?//
--ஆகலனா நீங்க அப்லிகெஷன் பொட ரெடியா இருகிங்க போல...?
தென்றல் சொன்னது போல இது பொறுப்பின்மையின் உச்சக்கட்டம்!
அசிங்கத்தின் உச்ச கட்டம்..
Post a Comment