ஏனுங்க… ரோபோ’ங்கறது தமிழ் வார்த்தையா? எனக்கு தெரிஞ்சு இல்லை. அப்ப வரி விலக்கு கெடைக்க என்ன பண்றது?
1) 100 கோடிக்கு என்னன்னலாமோ பண்ண போறம். இதலாம் பார்த்துக்கிட்டுன்னு விட போறாங்களா?
1) 100 கோடிக்கு என்னன்னலாமோ பண்ண போறம். இதலாம் பார்த்துக்கிட்டுன்னு விட போறாங்களா?
2) இது ஹீரோக்கு அவுங்க அப்பா வச்ச தமிழ் பேருன்னு சொல்ல போறாங்களா? (ரொம்ப பொல்லாதவன்… ரொபொ… ரோபோ… அட…!!!)
3) எதாவது சட்டதிருத்தம் நடக்குமா? (படம் வரும் போது யார் ஆட்சியிலே இருப்பாங்க?)
நீங்க என்ன நினைக்கிறீங்க?
7 comments:
படம் எடுத்து முடிக்கறதுக்குள்ள ஆட்சி மறிடும் , இந்த கோமாளி சட்டம் தூக்கப்படும்,
100 கோடியை கொட்டி படம் எடுப்பாங்களாம் , பத்து பைசா கூட வரி கட்ட மாட்டாங்களாம்
word verification தூக்கிருங்களேன்.
நாங்க என்ன நினைக்கிறோமா?
ரோபோ என்ற சொல் தமிழ்தான்னு சொல்லி வரிவிலக்கு வாங்கிருவோம்.
யார் இருந்தா என்ன? இங்கே ஒலிக்கும் ஜால்ரா அங்கே ஒலிக்காதா என்ன?:-)))))
துளசி கோபால், வருகைக்கு நன்றி... word verification தூக்கியாச்சி...
இன்று (15-01-2008) விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஷங்கரின் பேட்டியில் படத்துக்கு தமிழில் வேறு பேர் வைக்க போவதாக கூறினார். அது வரை படம் "ரோபோ" என்று அழைக்கப்படுமாம்.
ஆமாம். கலைஞர் டிவியிலும் சுஜாதாவும் பொருத்தமான வார்த்தை தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினார்..
ப்ரம்மாண்ட டைரக்டருக்கு வரி விலக்கு எல்லாம் ஒரு கவலையா?
//100 கோடியை கொட்டி படம் எடுப்பாங்களாம் , பத்து பைசா கூட வரி கட்ட மாட்டாங்களாம்//
சரியா சொன்னீங்க.....
ரஜினி நடித்தப்படம் மனிதன், அந்தப்பேரையே டெவலப் செய்து இரும்பு மனிதன் , எந்திர மனிதன் என்று பெயர் வைத்து மனிதன் மட்டுமே பெரிசா தெரியுறாப்போல போஸ்டர் அடிப்பாங்க ,பார்க்கிறவங்க ரீமேக் செய்றாங்க போலனு நினைத்து குழம்பினா அதுவும் விளம்பரம் தானே.பேருக்கு கீழே "the robo" என்று கேப்ஷன் போட்டுப்பாங்க... நாட்டுக்கு ரொம்ப முக்கியமான தகவலை சொல்லி இருக்கிங்க , அதான் நானும் என் அறிவுத்திறனைக்கக்கி இருக்கேன் :-))
Post a Comment