நடிகர் மாதவன் நடித்து தயாரித்து வெளியிட்டுயிருக்கும் படம் "எவனோ ஒருவன்". நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. டிவி'ல ஒரு சீன் பார்த்தேன். அதில கடைகாரர் கூல் டிரிங்க்ஸ்க்கு எக்ஸ்ட்ரவா ரெண்டு ரூபா கேக்குறாரு. கேட்டா கூலா இருக்கனும்ங்கரதுக்காக பிரிட்ஜல வைக்கணும், அதுக்கு கரண்டு சார்ஜுனு சொல்றாரு. மாதவன் பிரண்டும் ரெண்டு ரூபா கொடுக்க, அதுக்கு மாதவன் சண்ட பிடிக்குறாரு.
இந்த படம் சமுக கருத்த சொல்றதா சொல்றாங்க. இந்த படத்த தயாரிச்சதுக்காக மாதவன பாராட்டுறாங்க. இந்த சீன்ல கூல் டிரிங்கா அவங்க காண்பிக்குறது Pepsi. நம்ம மாதவன் தான் அதுக்கு விளம்பர மாடல். அதுல விளம்பரத்துக்கு நடிக்க சொல்லும் போது, அத தயாரிக்க ஒரு ரூபா தான் செலவு ஆகுது, நீங்க எதுக்கு பத்து ரூபாய்க்கு விக்குறிங்கன்னு கேள்வி கேட்கல. பூச்சி மருந்து இருக்குன்னு சொன்ன பிறகும் மக்களே, இத வாங்கி குடிங்கன்னு விளம்பரம் பண்ணிட்டு, இப்ப அவரு எடுத்த படத்துல்ல ஒரு கடைக்காரன் கிட்ட ரெண்டு ரூபா சண்ட போட்டு கருத்து சொல்றாரு.
சார், இது என்ன நியாயம்?
3 comments:
அப்படி போடு அருவாள!
மாதவன் தொழில் தர்மத்தோடு சரியா தான் செய்திருப்பார் , படத்தை சரியா பாருங்க, பெப்சி தந்த நீல நிற பிரிட்ஜ் அது ஆனால் அதன் உள் இருப்பது மாசா, அவர் குடிப்பது கோக்(பெயர் தெரியாமல் காட்டி இருப்பார்கள்)
எனவே மாதவன் உடைப்பது கோக் கம்பெனி, எப்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்சார் பாருங்க மாதவன்!:-))
நீங்க சொன்ன அந்த மேட்டரை நானும் கவனித்தேன், சமிபகாலமாக மாதவன் பெப்சி விளம்பரத்தில் வரலை அதான் அப்படிலாம் சொல்லலைனு நினைச்சுக்கிட்டேன்.
நல்லா கேளுங்க,
படத்துல எவ்வளவு அழகா சங்கீதா பொண்டாட்டியா இருக்கா, ஆனா வெளியிடங்களுக்கு வரும் போது வேற யாரையோ கூட்டிட்டு வர்றாரு.
அப்புறம் சினிமா கடைசி சீன்ல டிரைன்ல செத்து போறாரு ஆன நெசத்துலா உயிரோட சுத்திட்டு இருக்காரு..
நிஜத்துக்கும், நிழலுக்கும் சரியா வித்தியாசம் தெரிஞ்சு வெச்சு இருக்கீங்க்க.
Post a Comment