மொதல்ல இது ஒரு Dry ஆன ஏரியான்னு பொதுவா நினைப்பாங்க. ஆனா போற வழி எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளா பார்த்திட்டு போகலாம்.
தூத்துக்குடில கடல் இருக்கு. உப்பளங்கள் இருக்கு. ஆனா உப்பு தயாரிக்க பயன்படுத்தற தண்ணிர், நிலத்தடி நீர்.
இப்ப நிறைய உப்பளங்கள் மூடப்பட்டு வருவதாக கேள்விப்பட்டேன்.
இப்படி உப்பளமாக இருக்குற வழி, சட்டுனு வாழைமரம் நிறைந்த வழியா மாறுது.
இதுக்கு தேவையான நீரை வழங்குவது, தாமிரபரணி ஆறு. இதன் கரையோரம் ஆத்தூர், ஏரல், உமரிக்காடுன்னு நிறைய ஊர்கள், கிராமங்கள் இருக்கிறது.
இங்க ஆறுமுகநேரி, காயல்பாட்டினம் போன்ற ஊர்களைக் கடக்கும் போது வழியெல்லாம் பச்சப்பசேலேன்னு வயல்வெளிகள் உள்ளது.
இங்க இருக்குற குலசேகரபட்டினம்ங்கற ஊர், தசரா திருவிழாவுக்குப் பிரபலம். அப்ப பல ஊர்களில் இருந்து விதவிதமான வேடங்களில் வரும் பக்தர்கள் இங்க உள்ள கோவிலில் கூடுகிறார்கள்.
திருச்செந்தூருக்கு முன்னால் உள்ள காயல்பட்டினம் என்ற ஊரில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த ஒரு முருகன் கோவில் மட்டும்தான் கடலோரத்தில் அமைந்துள்ளது.
கடலுக்கு மிகவும் அருகில் அமைந்து இருங்தாலும் சுனாமியின் போது இந்த கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த சமயம் கடல் உள்வாங்கி, கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தது.
சிலர் கடவுளை கோவில், சிலைகளில் காண்கிறார்கள். சிலர் இயற்கையில் கடவுளை காண்கிறார்கள். இந்த இரண்டு வகையினருக்குமே திருச்செந்தூர் மனத் திருப்தியைக் கொடுக்கும்.
இக்கோவிலைப் பற்றி மேலும் அறிய இங்கே (http://tiruchendur.org/) சொடுக்கவும்.
19 comments:
புகைப்படங்கள் அருமை. திருச்செந்தூருக்கு முப்பது கிலோமீட்டர் தூரத்தில் வசித்திருக்கிறேன். பலமுறை போயிருக்கிறேன். ஆனாலும் உங்கள் பதிவு மீண்டும் ஒருமுறை போய்வந்த நிறைவைத் தந்தது.
நன்றி மதுரபாரதி...
திருச்செந்தூருக்கு முப்பது கிலோமீட்டர் தூரத்தில் எந்த ஊர்?
புகைப்படங்களனைத்தும் அ௫மை. குறிப்பாக, தி௫க்கோயிலை அழகான முறையில் வெளிப்படுத்தப்பட்டி௫க்கிறது. தங்களது தி௫ச்சேவை தொடர வாழ்த்துக்கள்.
caamsaravanan@gmail.com
நன்றி சரவணன்
நான் திருச்செந்தூரில் பிறந்தவன் அங்குள்ள ஆதித்தனார் கல்லூரில் படித்தவன்.
எங்கள் ஊரை பற்றிய படங்கள் தகவலுக்கு நன்றி
நான் திருச்செந்தூரில் பிறந்தவன் அங்குள்ள ஆதித்தனார் கல்லூரில் படித்தவன்.
எங்கள் ஊரை பற்றிய படங்கள் தகவலுக்கு நன்றி
நான் திருச்செந்தூரில் பிறந்தவன் அங்குள்ள ஆதித்தனார் கல்லூரில் படித்தவன்.
எங்கள் ஊரை பற்றிய படங்கள் தகவலுக்கு நன்றி
பக்கா.
நன்றி ஆட்காட்டி
கட்டுரையும் படங்களும் அருமை
நன்றி, harijana...
நன்றி அருப்புக்கோட்டை பாஸ்கர்...
தாங்கள் மு௫கப்பெ௫மானைப் பற்றியும் மு௫கப்பெ௫மானின் தி௫க்கோயில்களைப்பற்றியும் அறிந்து கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக இ௫க்கிறீர்கள். வெறும் எழுத்துக்களோடு நிறுத்திக் கொள்ளாமல் புகைப்படத்துடன் விளக்கியி௫ப்பது தங்களுடைய சிறந்த சேவை மனப்பான்மையைக் காட்டுகிறது. மேலும் மறைந்த மு௫கபக்தரான சாண்டோ சின்னப்பதேவரைப் பற்றியும் தேவர்ஃபிலிம்ஸாரின் ஈ-மெயில் முகவரியையும் தெரிந்து கொள்ள வி௫ம்புகிறேன் தங்கள் உதவி எனக்கு கிடைக்குமா?தங்௧ளைத்தான் முழு மூச்சாக நம்பியி௫க்கிறேன்.
caamsaravanan@gmail.com
சார், மறைந்த மு௫கபக்தரான சாண்டோ சின்னப்பதேவரைப் பற்றி தெரிந்து கொள்ள வி௫ம்புகிறேன் தங்கள் உதவி எனக்கு கிடைக்குமா?
தெரியவில்லை நண்பரே...
சரி பரவாயில்லை. தெரியும் பொழுது சொல்லுங்கள்
Anbu Saravana kumaran,
Vannakam
Englishiku mannikavum, saryinana tamil fonts that’s samayam illatha karanthal English type panna vendyiatha pochu.
Iam Sundar Tamilian , working in Banglaore , Presently in Athnes.
For the 4 hour iam continuosly reading your blog and I was very much happy to see a another person with similar taste like mine .
I don’t know which one to comment and which one to leave … all are fantastic.
Keep in touch take care .
Anbundun
Sundar.R
ரொம்ப தாமதமாக பதில் சொல்கிறேன். மன்னிக்கவும்.
சாண்டோ சின்னப்பா தேவர் பற்றி தெரிந்துக்கொள்ள இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.
http://nhm.in/shop/978-81-8493-117-4.html
சுந்தர்,
தொடர்ந்து நான்கு மணி நேரம் எனது எழுத்தை வாசித்ததாக நீங்கள் கூறியிருந்ததை படித்ததும், மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். மிக்க நன்றி.
Post a Comment