Friday, November 30, 2007

ஷாருக்கானுக்கு பாராட்டுக்கள்

சிறிது நாட்களுக்கு முன்பு NDTV யில் ஷாருக்கான் பேட்டி ஒளிபரப்பினார்கள். அதில் தான் எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க விரும்புவதாக கூறி இருந்தார். அதை போன வாரம் நிருபித்துக் காட்டிவிட்டார்.

தீபாவளிக்கு வெளியான அவருடைய ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் முன்னாள் ஹிந்தி நடிகர் மனோஜ் குமாரைக் கிண்டல் செய்து நடித்து இருந்ததாகவும் அதற்கு மனோஜ் குமார் கடும் கண்டனம் தெரிவித்து இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

நான் கூட அடடா ஷாருக்கான் மனோஜ் குமாருக்கு பிடிக்காதவராய் ஆகி விட்டாரே என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் ஷாருக்கான் மனோஜ் குமாரின் வீட்டிற்கு தனது மனைவி, தனது படத்தின் இயக்குனர் ஆகியோருடன் சென்று மன்னிப்பு கேட்டு மனோஜ் குமார் தலையில் பெரிய ஐஸ் வைத்து விட்டு வந்துள்ளார். (இதற்கு முன்பு பத்திரிக்கை வாயிலாக தனது மன்னிப்பைத் தெரிவித்து இருந்தார்). இப்பொழுது இருவரும் ராசி ஆகிவிட்டார்கள்.

http://timesofindia.indiatimes.com/India_Buzz/Its_home_shanti_home/articleshow/2578250.cms

இது பப்ளிசிட்டி ஸ்டண்ட் ஆக கூட இருக்கலாம். ஆனால் எந்த வித ஈகோவும் பார்க்காமல் தன்மேல் கோபம் கொண்டவர்களையும் தன்னை விரும்புபவர்களாய் மாற்றியதற்கு பாராட்டுக்கள்.

No comments: